தமிழகத்தில் லாட்ஜ் ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட சோதனையில், இலங்கையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, பாரிமுனை அடுத்து மண்ணடி பகுதியில் கடத்தல் பொருட்கள் விற்கப்படுவதாக வடக்கு கடற்கரை பொலிசாருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன், ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் பொலிசார் உடனடியாக, மண்ணடி பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு ஒரு வாலிபர், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர், இலங்கையை சேர்ந்த முஸ்தபா (35) என்பதும், இலங்கையில் இருந்து சிகரெட் பண்டல்களை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது
இதையடுத்து அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த பொலிசார் அவரை கைது செய்து முஸ்தபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.