அம்மா, அப்பாவை விட்டு செல்கிறேன்! தூக்கில் தொங்கிய 17 வயது மாணவி... கடிதத்தில் இருந்த வார்த்தைகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 17 வயதான கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெல்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (17). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் ரஞ்சிதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் ரஞ்சிதா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது ரஞ்சிதா, தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரஞ்சிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ரஞ்சிதா எழுதிய கடிதம் ஒன்று பொலிசாரிடம் சிக்கியது.

அதில் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பலருக்கு கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். இதனால் இந்த கடினமான முடிவை எடுக்கிறேன். எனது அம்மா, அப்பா, நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்த விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரஞ்சிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்