டெல்லி வன்முறை.... மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி..! முக்கிய வேண்டுகோள்

Report Print Basu in இந்தியா

தொடர் வன்முறையால் இந்திய தலைநகர் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இந்துக்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே பல நாட்கள் வன்முறை மோதல்கள் ஏற்பட்ட நிலையில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி வருகையால் வன்முறை குறித்து வாய் திறக்காத மோடி தற்போத மவுனம் கலைத்துள்ளார். 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வழும் இந்திய தலைநகரில் அமைதியை மீட்டெடுப்பது முக்கியம் என்றார்.

இதுகுறித்து மோடி ட்விட்டரில் கூறியதாவது, அமைதியும் நல்லிணக்கமும் நமது பண்பாடின் அடிப்படைக் கூறுகள். எல்லா நேரங்களிலும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு டெல்லியில் உள்ள எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விரைவில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டமைக்கப்படுவது முக்கியம் என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. பொலிஸ் மற்றும் பிற ஏஜென்சிகள் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்த களத்தில் செயல்படுகின்றன என மற்றொரு ட்விட்டல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்