பல முறை Sperm Donate செய்த காசி! அதற்கு கைமாறாக பெண் மருத்துவர் செய்து வந்த செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் அடுத்த பொள்ளாச்சி என்றழைக்கப்படும் காசி என்ற இளைஞனின் லீலைகளின் பட்டியலில், தற்போது பெண் மருத்துவரை பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற 26 வயது மதிக்கத்தக்க இளைஞன், நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வைத்து மிரட்டுவதுடன், தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின் காசியைப் பற்றி பொலிசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில், அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பது தெரியவந்தது. இளம் பெண்கள் மட்டுமின்றி அந்த பெண்களின் புகைப்படத்தை வைத்து, அவர்களின் அம்மாக்களையும் அடி பணிய வைத்துள்ளான்.

இவனுக்கு பின்னாள் மிகப் பெரிய கட்சியின் ஆதரவு இருப்பதாகவும், தீவிர விசாரணை நடத்தினால், பல விஐப்பிகளின் பிள்ளைகள் மற்றும் கட்சியின் முக்கிய பதவியில் உள்ளவர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

அதை நிரூபிக்கும் வகையில், காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் ஓடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அந்த ஓடியோவில் காசிக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனால் இது மற்றொரு பொள்ளாச்சியை போன்றது என்று தமிழ்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது டெஸ்ட் டியூப் குழந்தை மருத்துவத்தில் சிறப்பு வாய்ந்த பெண் மருத்துவர் ஒருவர் காசியின் வலையில் விழுந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் காசியின் அழகு, பேச்சு திறமை,இதெல்லாம் பார்த்து மயங்கியுள்ளார்.

அதன் பின் நெருங்கி பழகியுள்ளார். காசியை பலமுறை ஸ்பெர்ம் டொனேட்(Sperm Donate) செய்யவும் உரிமையாக கேட்டுள்ளார்.

காசியும் பலமுறை அதன் படி செய்துள்ளார். அதற்கு ஒருமுறை அந்த பெண் மருத்துவர், எத்தனை பேர் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட காசி மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று, தன்னுடைய நண்பர்களை எல்லாம் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி, அவர்களை Sperm Donate செய்ய வைத்துள்ளான்.

இதற்கு பதிலாக, காசி அழைத்து வரும் இளம் பெண்களின் கருவை குறித்த பெண் மருத்துவர் அழிப்பதற்கு உதவி செய்து வந்துள்ளார்.

இப்படி காசியைப் பற்றி ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருப்பதால், இவனுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும், விசாரணை எல்லாம் வேண்டாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்