காதல் திருமணத்திற்காக... சகோதரியிடம் அத்துமீற முயற்சி: ஐஸ் கிரீமில் விஷம் கலந்த இளைஞரின் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் ஐஸ் கிரீமில் விஷம் கலந்து சகோதரியை கொலை செய்த வழக்கில் கைதான இளைஞரின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

கேரளாவில் பெற்றோர் உட்பட மூவருக்கு ஐஸ் கிரீமில் விஷம் கலந்து கொல்ல முயன்ற 22 வயது ஆல்பின் பென்னி என்ற இளைஞர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆல்பினின் சகோதரி 16 வயது ஆன்மேரி இறந்த விவகாரத்தில், தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது கண்டறிந்தனர்.

மட்டுமின்றி ஆன்மேரியின் பெற்றோரின் ரத்தத்திலும் விஷம் காணப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் கடைசியாக சாப்பிட்டதாக கூறும் ஐஸ் கிரீமை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் எலிகளுக்கு பயன்படுத்தும் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி ஆன்மேரியும் ஆல்பினும் சேர்ந்து குடியிருப்பில் ஐஸ் கிரீம் தயாரித்துள்ளனர்.

இதிலேயே ஆல்பின் விஷம் கலந்துள்ளார். இந்த நிலையில், கைதான ஆல்பினிடம் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

தமது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமது நண்பர்களை பெற்றோர் அவமதித்தது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமது காதலுக்காகவும் சொத்துக்காகவும் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டதாக ஆல்பின் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆல்பினின் நடத்தை சரியில்லை எனவும், சொந்த சகோதரியிடம் பலமுறை மோசமாக நடக்க முயன்றதாகவும், இது பெற்றோருக்கு தெரியவர அதனாலையே சகோதரியை கொல்ல திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஆல்பின் ஆபாச வீடியோக்களுக்கு அடிமை எனவும், அவரது நண்பர்களால் ஆன்மேரிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பெற்றோர் ஆல்பினை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் குழம்பில் விஷம் கலக்க முயன்று முடியாமல் போனதாலையே, ஐஸ் கிரீமில் விஷம் கலக்க திட்டமிட்டதாக பொலிசாரிடம் ஆல்பின் தெரிவித்துள்ளார்.

ஆல்பினின் சகோதரி இறந்த நிலையில், பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்