இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கியுள்ளதாக தமிழக பொலிசாருக்கு இன்டர்போல் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி தமிழக கியூ பிராஞ்ச் பொலிசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி‌ பொன்சேகா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையை சேர்ந்த மற்றொரு நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா' தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் இது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்