உடன் பிறந்த அக்கா மற்றும் அவர் குழந்தையை உயிரோடு எரித்து விட்டு வெட்டி கொன்ற இளம் வயது தங்கை! அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in இந்தியா
1071Shares

தமிழகத்தில் சொத்துக்காக உடன்பிறந்த அக்காவையும் அவரின் குழந்தையையும் கொலை செய்த தங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள சகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சுமதி , சுஜாதா என இரண்டு மகள்கள் இருந்தனர்.

இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் இளைய மகள் சுஜாதா பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த நிலையில் கடந்த 6 மாதமாக அங்கு இருந்துள்ளார்.

இந்நிலையில், மூத்த மகள் சுமதி தனது ஒரு வயது குழந்தை ஸ்ரீநிதியுடன் அசகளத்தூரில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 31 -ஆம் திகதி அன்று, சின்னசாமியும் அவரின் மனைவி மயிலும் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டனர்.

இந்த சமயத்தில் வீட்டிலிருந்த சுமதி மற்றும் சுஜாதாவுக்கும் இடையே தந்தையின் வீடு மற்றும் நிலத்தை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுஜாதா, கண்ணிமைக்கும் நேரத்தில் அக்காள் சுமதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், சுமதியின் இடுப்பிலிருந்த கைக்குழந்தை ஸ்ரீநிதி மீதும் தீப்பற்றியது. தாயும், குழந்தையும் தீயில் கருகி அலறி துடித்தனர். உடலில் தீ பற்றி எரிந்த நிலையிலும் ஆத்திரம் தாளாத சுஜாதா இரக்கமே இல்லாமல் கொடுவாளை எடுத்து சுமதியை வெட்டியுள்ளார்.

வீட்டிலிருந்து அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுமதி தீயில் கருகி கிடப்பதையும் கையில் கொடுவாளுடன் சுஜாதா நிற்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

தொடர்ந்து , படுகாயமடைந்த சுமதியையும்,அவரது குழந்தை ஸ்ரீ நிதியையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் சுஜாதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்