சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறதா? எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்

Report Print Raju Raju in இந்தியா
241Shares

சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், சசிகலா சிறையில் இருந்து வருவதால் அதிமுகவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது.

ஜெயலலிதா இருந்த வரை அவர் அதிமுக கட்சியில் கூட இல்லை.

சிறையில் இருந்து வந்த பிறகு சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை -

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறுவது தவறான தகவலாகும்.

அமமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவிற்கு வந்துவிட்டனர், அமமுகவில் தற்போது தினகரன் மட்டுமே உள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்