இந்தியாவில் ஏழாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட 63 வயது முதியவர், தன்னுடைய 6-வது மனைவியை விட்டு பிரிவதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், சூரத் பகுதியை சேர்ந்தவர் அய்யூப் தேகியா. 63 வயதாகும் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னை விட 21 வயது குறைவான பெண்ணை 6-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இவர் தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாக கூறி பிரிந்து சென்றார்.
அவள் எனதருகில் உறங்குவதற்கு கூட விரும்புவதில்லை. தொற்று வியாதிகள் உருவாகி விடும் என பயப்படுகிறார். எனக்கு நீரிழிவு நோய், இருதய நோய் என பல பிரச்சனைகள் உள்ளது. இதனால் எனக்கு உடலுறவு செய்து கொள்வதற்கு மனைவி வேண்டும்என தேகியா தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு 6-வது மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் தேகியா குறித்து விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே ஐந்து திருமண்ம ஆகியுள்ளது என்ற உண்மையே தெரியவந்துள்ளது.
அதில், தேகியாவின் முதல் மனைவி அதே கிராமத்தில் தனது ஐந்து பிள்ளைகளுடன் தற்போதும் வசித்து வருகிறார்.
முதல் மனைவியின் ஐந்து பிள்ளைகளுக்கும் 20 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் அவர் அதிர்ச்சியடைந்த 6-வது மனைவி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தேகியா திருமணம் செய்த ஆறாவது மனைவி, முன்னதாக விதவையாக இருந்துள்ளார்.
அதனை பயன்படுத்தி அவருக்கு அதிக நகைகள் மற்றும் பணம் கொடுத்து கவனித்து கொள்வதாக கூறி அவரை தேகியா திருமணம் செய்துள்ளார்.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணை அவரது சகோதரியின் வீட்டில் விட்டுச் சென்ற தேகியா, அதன் பிறகு அவரை அழைத்துச் செல்ல வரவேயில்லை. அது மட்டுமில்லாமல், மற்ற மனைவிகளிடம் இருந்து ஏன் அவர் பிரிந்து சென்றார் என்பது குறித்தும் தேகியா எதுவும் கூறவில்லை.
ஆறாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் உடலுறவு கொள்ள மறுத்ததால் இனி அவருடன் வாழ விருப்பமில்லை என தேகியா தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து உரிய விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.