வாக்களிக்க சைக்கிள் ஓட்டி வந்த விஜய்! பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு?

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெறிவிக்கவே நடிகர் விஜய் சைக்கிளில் பயணித்து வந்து வாக்களித்தாக கூறப்படுகிறது.

அவரது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

பிரபலங்கள் பலரும் வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் முதல் ஆளாக வாக்களித்துச் சென்ற நிலையில், நடிகர் விஜய் சற்று வித்தியாசமாக தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்களிக்க சென்றுள்ளார்.

நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நெஷனல் பள்ளியில் அவருக்கான வாக்குச்சவாடி இருக்கும் நிலையில், அருகில் கபாலீஸ்வரர் நகரில் இருக்கும் தனது வீட்டிலிருந்து மிகவும் வேகமாக சைக்கிள் ஒட்டிச் சென்றார்.

அவரைப் பின்தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலர் தங்கள் இருசக்கர வாகனங்களில் வந்தனர். வாக்குச்சாவடியில் நூற்றுக்கனக்கான ரசிகர்கள் அவரை சூழ்ந்த நிலையில் விறுவிறுவென சென்ற அவர் தனது வாக்கினை செலுத்தினார்.

பின்னர், வீட்டிற்கு திரும்பிய விஜய் பைக்கில் ஏறி சென்றார்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே சைக்கிளில் வந்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்