Audi A8 காரின் வீடியோ டெமோ வெளியாகியது

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
382Shares
382Shares
lankasrimarket.com

ஜேர்மனை சேர்ந்த பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான Audi ஆனது உலகத்தரம் வாய்ந்த கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.

ஆடம்பர கார்களிற்கும் பிரபல்யம் பெற்ற இந்த நிறுவனம் சீரியல் முறையில் Audi காரினை அண்மைக்காலமாக சந்தைப்படுத்தி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக Audi A8 எனும் புதிய காரினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.

ஐந்து வெவ்வேறு வகையான என்ஜின்களைக் கொண்ட பதிப்புக்களாக இக் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவற்றில் இரண்டு 3.0 டீசல், பெட்ரோல் என்ஜின் வகையை சார்ந்தது, மேலும் இரண்டு வகை 4.0 டீசல், பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒன்று 6.0 Litre w12 பெட்ரோல் என்ஜின் வகைகளைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இவற்றின் விலைகள் 90,000 யூரோக்களில் இருந்து ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த கார்களின் வடிவமைப்பு மற்றும் இயக்கம் தொடர்பான டெமோ வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments