பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்: எங்கு நடக்கிறது தெரியுமா?

Report Print Kabilan in வாழ்க்கை முறை

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸின் திருமணம், ஜோத்பூரில் நவம்பர் மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னை விட பத்து வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனாஸை அவர் காதலித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிரியங்கா-ஜோனாஸின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா மற்றும் ஜோனாஸ் இருவரும் ஜோத்பூர் சென்றதை, பிரியங்காவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா உறுதி செய்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளும் இடத்தை பார்ப்பதற்காகவே இவர்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர்கள் உறுதிபடுத்தவில்லை.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்