நீங்கள் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற வேண்டுமா? அப்போ உடனே இதை படிங்க

Report Print Kavitha in வாழ்க்கை முறை
292Shares

சாஸ்திரப்படி ஒவ்வொரு நாளையும் எப்படி அதிர்ஷ்டகரமானதாகவும், வெற்றிகரமானதாகவும் எப்படி தொடங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

திங்கள் கிழமை

திங்கள் கிழமையை ஆள்வது சிவபெருமான்தான். எனவே திங்கள் கிழமையை சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டு தொடங்கும் போது அந்த நாளில் செய்யும் எந்த செயலும் வெற்றிகரமானதாக அமையும்.

புதிய தொழில் மற்றும் எந்தவொரு பணம் தொடர்பான காரியங்களையும் தொடங்குவதற்கு திங்கள் கிழமை சிறந்த நாளாகும்.

திங்கள் கிழமையன்று வெள்ளை நிற உடையணிவது மிகவு அதிர்ஷ்டமானது அதேசமயம் எக்காரணத்தைக் கொண்டும் கருப்பு நிற உடை அணியக்கூடாது.

திங்களன்று அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு சிறந்த வழி வெளியே செல்வதற்கு முன் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு செல்வதுதான்.

திணைகள் கிழமையில் தேனும், வெள்ளரிக்காயும் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல முடிவுகளை வழங்கும்.

செவ்வாய் கிழமை

செவ்வாய் கிழமையன்று முருகனின் அருளை பெறுவது உங்களின் நாளை அதிர்ஷ்டமான நாளாக மாற்றும்.

செவ்வாய் கிழமையில் முருகனின் அருள் அந்த நாளில் இருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கும்.

செவ்வாய் கிழமையை கால்நடைகளளுக்கு உணவளிப்பதுடன் தொடங்குவது நல்லது. இது தீயசக்திகளுக்கு எதிராக உங்களை பாதுகாக்கும்.

செவ்வாய் கிழமையில் சிவப்பு நிற துணி அணிவது மிகவும் நல்லது. ஒருவேளை உங்களால் சிவப்பு நிற உடை அணிய இயலவில்லை என்றால் உங்களுடன் சிவப்பு நிற மலர்களை வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும்.

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் பச்சைக் கொத்தமல்லியை ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புதன் கிழமை

புதன் கிழமையை ஆளும் கடவுள் விஷ்ணு ஆவார். காதலுக்கு இது சிறந்த நாளாகும். இந்த கிழமையில் விஷ்ணு தனது பக்தர்களுக்கு புத்திக்கூர்மையை ஆசீர்வாதமாக வழங்குகிறார்.

புதன் கிழமையில் அதிகாலையில் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்களின் வெற்றியை உறுதி செய்யும்.

புதன் கிழமையில் பச்சை நிற ஆடையணிவது உங்களின் அனைத்து செயல்களிலும் வெற்றியையும் உறுதி செய்யும்.

புதன்கிழமையில் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கான எளிய தீர்வு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் இனிப்பு சாப்பிட்டு விட்டு கிளம்புவதுதான்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை லக்ஷ்மி தேவிக்கான நாளாகும். அனைத்து கடவுள்களையும் வழிபடுவதற்கும், கோவிலுக்கு செல்வதற்கும் சிறந்த நாள் வியாழக்கிழமைதான்.

வியாழக்கிழமை எந்த பயணமும் மேற்கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது ஒருபோதும் சீரான முடிவுகளை வழங்காது.

வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற உடையணிவது சிறந்த பலன்களை வழங்கும்.

ஒருவேளை உங்களால் மஞ்சள் நிற உடையணிய இயலவில்லை என்றால் மஞ்சள் நிற மலரை உடன் வைத்திருப்பது நல்லது.

வியாழக்கிழமை வெளியே செல்வதற்கு முன் நெய் அல்லது பப்பாளியை சாப்பிட்டு விட்டு செல்வது நல்லது.

வெள்ளி கிழமை

வெள்ளி கிழமைக்கான கடவுள் புவனேஸ்வரி தேவி ஆவார். அவரின் அருளை பெறுவது சிறந்த பலன்களை வழங்கும்.

புதிய வாகனங்கள் வாங்குவதற்கும், நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும் இது சிறந்த நாளாகும்.

புது வீடு, நகை போன்றவை வாங்குவதற்கு இது சிறந்த நாளாகும்.

வெள்ளி கிழமையன்று நீல நிற உடையணிவது அற்புதமான பலன்களை வழங்கும்.

இந்த கிழமையில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க சிறந்த மற்றும் எளிய வழி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் தயிர் சாப்பிடுவதாகும்.

பால் தொடர்பான ஏதாவது ஒரு பொருளை சாப்பிடுவது நல்லது.

சனிக்கிழமை

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க எளிய வழி சனிக்கிழமையன்று சனிபகவானின் அருளை பெறுவதாகும்.

பணம் தொடர்பான விஷயங்கள் தொடங்குவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் இது சிறந்த நாளாகும்.

சனிக்கிழமையன்று விரதமிருந்து சனிபகவானை வழிபடுவது அவரின் அருளை பெற்றுத்தரும்.

எள் விதைகளை சனிக்கிழமையில் சாப்பிடுவது உங்களுக்கு நல்லதாகும். நீல் நிற மலர்களை வீட்டில் வைப்பது, கருப்பு நிற உடையணிவது போன்ற எளிய செயல்கள் உங்களுக்கு சனிபகவானின் அருளை பெற்றுத்தரும்.

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் நெய் சாப்பிடுவது நல்லது.

ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமை சூரிய பகவானுக்கு உண்டான நாளாகும். பழைய மோதல்களை தீர்க்க இந்த நாள் மிகவும் சிறந்ததாகும்.

ஆனால் புதிய வீட்டிற்க்கு செல்வதற்கு இந்த நாள் உகந்ததல்ல. ஆனால் இந்த நாளில் தொடங்கும் அனைத்து பயணங்களும் சிறந்த பலன்களை வழங்கும்.

பிங்க் மற்றும் பழுப்பு நிற உடையணிவது நல்ல பலன்களை அளிக்கும்.

இந்த நாளில் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கான மிகசிறந்த வழி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் வெற்றிலை சாப்பிடுவதாகும், மேலும் சூரிய பகவானுக்கு தண்ணீரை வைத்து வழிபடுவது நல்ல பலன்களை வழங்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்