25 வயது அழகியை திருமணம் செய்த 49 வயது மலேசிய அரசர்: கர்ப்பமாக இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட புதிய முடிவு

Report Print Deepthi Deepthi in மலேசியா

மலேசியாவின் 15ஆவது அரசர் ஐந்தாம் சுல்தான் முகமது கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி ரஷ்யாவின் முன்னாள் மொடல் அழகி ஓக்சானா வியோவொடினாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தையடுத்து அரசருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து அவர் பதவி விலகியநிலையில் மலேசிய அரசராக Sultan Abdullah Sultan Ahmad தெரிவாகியுள்ளார்.

மலேசியாவின் அரசர்கள் அயல்நாட்டினரை மணப்பதோ, முஸ்லீம் அல்லாதவர்களை மணப்பதோ புதிது அல்ல.

சம்பிரதாயமாக அரசராக பணியாற்றும் அந்நபருக்கு குறைவான சட்ட அதிகாரங்களே உள்ளன. ஆனால் கலாசாரரீதியாக அவருக்கு மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு இருக்கும்.

எனவே, இது கலாசார பாதிப்பு என கருதி அரசர் பதவியை துறந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், புதிதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஓக்சானா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், அரசருடன் இவரது திருமணம சட்டசிக்கலை சந்தித்துள்ளது தற்போது விவாகரத்து செய்துகொள்ளும் முடிவு எடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரும், விவாகரத்து தொடர்பான விவரங்களை சமர்ப்பித்துவிட்டதாகவும் தற்போது அதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவலை ஓக்சானாவின் தந்தை மறுத்துள்ளார்.

இப்படி ஒரு முட்டாள்தமான செய்திகளை நான் படிப்பதில்லை, எனது மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers