தீவிரவாதிகள் அட்டூழியம்: ரமழான் மாதத்தில் தொடர் தாக்குதல்கள்

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்
தீவிரவாதிகள் அட்டூழியம்: ரமழான் மாதத்தில் தொடர் தாக்குதல்கள்

சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித இடமான மதீனாவில் தற்கொலைப்படை குண்டு தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

மெக்காவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் புனித இடமாக மதீனா உள்ளது.

இங்கு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் ரமழான் நோன்பை திறக்கும் வேளையில் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர், எனினும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதற்கிடையே அல்-அரேபியா தொலைக்காட்சி வாகனம் வெடித்து சிதறியதற்கான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதம் முடிவடையவுள்ள நிலையில் தீவிரவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments