சிலுவையில் அறைந்து... தலை துண்டித்த கொடூரம்: அரிதிலும் அரிதாக பழங்கால தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
134Shares
134Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலையும் செய்த நபருக்கு அரிதிலும் அரிதான பழங்கால தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர்.

சிலுவையில் அறையப்பட்டு பின்னர் தலையை துண்டித்து தண்டனை வழங்கப்படுவது சவுதி அரேபியாவில் மிகவும் உக்கிர குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மட்டுமே.

மியான்மார் நாட்டவரான Elias Abulkalaam Jamaleddeen என்பவர் பெண் ஒருவரின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து அவரை அச்சுறுத்தி பின்னர் கத்தியால் கொடூரமாக கொலை செய்துள்ளார் என சவுதி அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, குறித்த நபர் பேரில் இன்னொரு கொலை முயற்சி வழக்கும், கற்பழிப்பு வழக்கும் உள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கின் அனைத்து கட்ட விசாரணையும் முடிவந்த நிலையில் விதிக்கப்பட்ட சிலுவைத் தண்டனையை நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன், சவுதி மன்னர் சல்மானும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதனன்று சிலுவையில் அறைந்த சில மணி நேரத்திலேயே அதிகாரிகள் அவரது தலையை வெட்டி அடுத்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட உடல் சில மணி நேரம் சிலுவையில் கிடந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் அதிகபட்ச தண்டனையாக பொதுமக்கள் மத்தியில் வைத்து தூக்கிலுடுவதே வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் அரிதிலும் அரிதான வழக்குகளில் சிலுவைத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இதுவரை தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுவது சவுதியில் 70% அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்