இளவரசரை விமர்சித்த பத்திரிகையாளரை துண்டாக வெட்டி காட்டுக்குள் வீசிய சவுதி அதிகாரிகள்: அம்பலமான தகவலால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி தூதரகத்துக்குள் வைத்து பிரபல பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால் கஷோகி.

இவர் கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதி அரசு திட்டமிட்டு இயங்கியுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்து, தொடர்ந்து துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு விவகாரத்து வாங்கியது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி சென்றுள்ளார்.

இவரை மீண்டும், அக்டோபர் 2 ஆம் திகதி தூதரகத்துக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். சவுதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இவரை கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்பவர்கள் தான் இந்த சிறப்பு குழு.

ஜமாலை சித்ரவதைச் செய்து கொன்ற பின்னர், உடற்கூறு ஆய்வு நிபுணரான சலா, அவரின் உடலை பல பகுதிகளாக வெட்டியுள்ளார். பின்னர், உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர்.

தற்போது, வெளியாகியுள்ள இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, சவுதியை எச்சரித்துள்ளது.

காட்டுக்குள்ள வீசப்பட்ட ஜிமாலின் உடல் பாகங்களை துருக்கி பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்