அமெரிக்காவுடன் அதிகரிக்கும் பதற்றம்.. வட கொரியாவை தொடர்ந்து ஈரான் திடீர் ஏவுகணை சோதனை

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடான ஈரான் புதிய ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து, ஈரான்-அமெரிக்கா நாடுகளிடையே தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது

இந்நிலையில், ஈரான் ஒரு புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளது என்று ஈரானின் புரட்சிகர காவலர்களின் தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி தெரிவித்ததாக Tasnim news agency தெரிவித்துள்ளது.

எங்கள் நாடு எப்போதுமே பலவிதமான பாதுகாப்பு மற்றும் புதிய உத்திகளை சோதிக்கும் அரங்காகும், இவை நமது நாட்டின் பாதுகாப்பு சக்தியின் வளர்ச்சியை நோக்கிய இடைவிடாத செயல்கள்.

நேற்று தேசத்தின் வெற்றிகரமான நாட்களில் ஒன்றாகும் என்று சலாமி கூறியுள்ளார். மேலும், சோதனை செய்யப்பட்ட ஏவுகணை குறித்து கூடுதல் தகவல்களை அவர் வழங்கவில்லை.

இதனிடையே, ஜப்பான் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ததாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்