திட்டமிட்டு கொல்லப்பட்ட மன்னரின் மெய்க்காப்பாளர்? சவுதியை சுற்றும் மர்மம்

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், மர்மம் சூழ்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபிய மன்னர் சல்மானின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் ஜெனரல் அப்தேலாஜிஸ் அல்-ஃபகாம், சனிக்கிழமை மாலை மேற்கு நகரமான ஜெட்டாவில் மர்மமான முறையில் சுடப்பட்டார். அங்கிருந்து வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரும்பாலான சமயங்களில் மன்னரின் அருகாமையிலேயே அவர் நின்று கொண்டிருப்பார். சமீபத்தில் ஈராக் பிரதமர் ஆதில் அப்துல்-மஹ்தியுடனான சந்திப்பின்போதும் அவர் உடனிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக 'தி டைம்ஸ்' பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மர்ம இருப்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணம் தொடர்பான தகவல்கள் மெய்காப்பாளருக்கு தெரிந்திருக்கலாம். அதற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்