புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டது ஆப்பிள்: இந்த ஐபோன் வைத்திருப்பவர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனமானது சில வாரங்களுக்கு முன்னர் iOS இயங்குதளத்திற்கான புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

iOS 12.3.1 எனும் குறித்த பதிப்பில் உள்ள கமெரா அப்பிளிக்கேஷனில் குறைபாடு காணப்பட்டது.

இந்நிலையில் இதனை திருத்தியமைத்து மற்றுமொரு பதிப்பினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

iOS 12.3.2 என்பதே புதிய பதிப்பாகும்.

எனினும் இப் பதிப்பினை iPhone 8 Plus கைப்பேசிகளில் மாத்திரமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பதிப்பினை அப்டேட் செய்வதற்கு Settings பகுதிக்கு சென்று General என்பதில் உள்ள Software Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதேவேளை விரைவில் iOS 13 எனும் பிரதான பதிப்பு ஒன்று வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்