சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Realme தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்கின்றது.
Realme 7 5G எனும் குறித்த கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய LCD தொழில்நுட்பத்தினாலான Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Dimensity 800U mobile processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM, மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக் கைப்பேசியில் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தவிர நீடித்து உழைக்கக்கூடிய 5000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.
முதன் முறையாக தாய்லாந்தில் இக் கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ள போதிலும் இதுவரை விலை தொடர்பான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.