தவறான பாதையில் பயணித்த நபரின் பரிதாப நிலை! என்ன ஆனார் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
199Shares
199Shares
ibctamil.com

சீனாவில் நபர் ஒருவர் மிதிவண்டியில் வீட்டுக்கு புறப்படுவதாக கூறி தவறான பாதையில் 1,500கி.மீ பயணம் செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நவீன யுகத்தில் தெருக்கோடியில் இருக்கும் கடையை கூட கூகிள் மேப்பில் பார்த்து உறுதி செய்த பின்னரே பயணப்படுகிறோம். மட்டுமின்றி இணையவசதியும் அது சார்ந்த தொழில்நுட்பங்களும் அதிகரித்த நிலையில் நாம் செல்லும் பாதை என்பது சரிதானா என்பதை பலமுறை உறுதிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இதுபோன்ற வசதிகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் பெரும்பாடு பட்டிருப்பார்கள் என்பதற்கு சீனாவில் நடந்த ஒரு நிகழ்வே சான்று.

சீனாவின் Qiqihar நகரில் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டு இவர் பணிபுரியும் பகுதியில் இருந்து சுமார் 30 நாட்களுக்கு முன்பு தனது மிதிவண்டியில் பயணமாகியுள்ளார்.

இந்தநிலையில் அந்த நபர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமது மிதிவண்டியில் கடந்து சென்றுகொண்டிருந்தபோது பொலிசாரால் Anhui மாகாணத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். காரணம் குறித்த தேசிய நெடுஞ்சாலையில் மிதிவணடிகளை அனுமதிப்பதில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டு Qiqihar நகர் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த நபரின் பதில் பொலிசாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம் அந்த நகரம் இருக்கும் பகுதிக்கு எதிர் திசையில் சுமார் 1500 கி.மீ தூரம் கடந்து வந்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபரின் பரிதாப நிலையை உணர்ந்த பொலிசார் அவருக்கு பேருந்து கட்டணம் வழங்கி அவரது சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த டிசம்பரில் பயணமான் அந்த நபர் பொலிசார் உதவியதால் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments