மனைவி, குழந்தை கண் முன்னே கணவனை கடித்து குதறிய புலிகள்.. என்ன ஆனார் தெரியுமா? பதறவைக்கும் வீடியோ!

Report Print Santhan in ஏனைய நாடுகள்
582Shares
582Shares
lankasrimarket.com

சீனாவின் பிரபல பூங்கா ஒன்றில் மனைவி மற்றும் குழந்தை கண்முன்னே புலிகள் கணவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Ningbo நகரத்தில் Youngor என்ற வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இது சாங்காயின் தென் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீற்றர் தூரத்தில் உள்ளது.

இங்கு புலிகள் உள்ள பகுதியில் ஆண் ஒருவர் திடீரென்று நுழைந்துள்ளார். அப்போது அங்கிருந்த புலிகள் அவரை தாக்கி கடித்துக் கொண்டிருந்துள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த நபர்கள் இதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.

இருந்த போதிலும் புலிகள் விடுவது போல் இல்லை. இதனிடையே இந்த காட்சிகளை பார்த்து வாய்விட்டு அலறிய பெண் ஒருவர் தமது கணவரை காப்பாற்ற வேண்டும் எனக் கோரி அங்கிருந்த ஊழியர்களிடம் முறையிட்டார்.

அங்கிருந்த பூங்கா காவலாளிகள் புலியை விரட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் புலியிடம் மாட்டிக் கொண்ட நபர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேலே எழுந்த போது புலிகள் உடனடியாக அவரின் கழுத்துப்பகுதியைத் தாக்கி மீண்டும் தரையில் இழுத்து வைத்து கடித்துக் கொண்டிருந்தது.

இதனால் பெரிதும் அதிர்ச்சியடந்த காவலாளிகள் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். அதன் பின்னரே புலிகள் அங்கிருந்து சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அன்று மாலை பூங்கா மூடப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments