படகுகள் நேருக்கு நேர் மோதி 250 பேர் பலி? வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்காக சென்றபோது நிகழ்ந்த விபத்தில் சுமார் 250 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ஒவ்வொரு நாளும் அகதிகள் படகுகளில் பயணம் செய்து வருகின்றனர்.

மோசமான வானிலை, கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால் ஏற்படும் ஆபத்துகளில் சிக்கி அடிக்கடி உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு படகுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்துள்ளனர்.

லிபியாவில் உள்ள கடற்கரை அருகே வந்தபோது இரண்டு படகுகளும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர் மற்றும் கப்பல்களில் சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

ஆனால், பெரும்பாலான நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கரையில் ஒதுங்கிய 10 சடலங்கள் மட்டும் மீட்புக் குழுவினரிடம் சிக்கியுள்ளது.

மேலும், படகுகள் மோதியதில் அதில் பயணித்த 250 பேரும் கடலில் மூழ்கி பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா மனித உரிமை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 30 பெண்களும் 9 குழந்தைகள் அடங்குவார்கள். இந்த உயிரிழப்பின் மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 1,300 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த வியாழக்கிழமை முதல் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 7,500 ஆக அதிகரித்துள்ளது என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments