வடகொரியா ஏவுகணை பறந்த போது ஜப்பானில் நடந்தது என்ன?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1140Shares
1140Shares
lankasrimarket.com

வடகொரியா நேற்று(29 ஆம் திகதி) காலை மீண்டும் மேற்கொண்டு ஏவுகணையானது ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் பறந்தது.

ஜப்பானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது, ஏவுகணை ஜப்பானின் வான் பகுதியில் சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டார்.

மேலும், ”தங்கள் நாட்டின் வானிலை ஏவுகணையை பறக்கவிடுவது பொறுப்பற்ற செயல் என்று அபே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏவுகணை பறந்தபோது ஜப்பான் நாட்டில் நடந்ததாவது, ஜப்பான் நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 5.57 மணிக்கு இந்த ஏவுகணை பறந்துள்ளது.

சைரன் ஒலி சத்தம் கேட்டு தான் ஜப்பான் நாட்டு மக்கள் கண்விழித்துள்ளனர், வட கொரியாவின் ஏவுகணை ஜப்பானின் ஹொக்காய்டோ தீவின் மீது பறந்தது.

பாலிஸ்டிக் ஏவுகணை என சந்தேகிக்கப்படும் இது ஜப்பான் மீது பறந்து கடலில் விழுந்தது. உறுதியான கட்டடங்களின் கீழ் தளங்களில் தஞ்சமடையும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

மக்களுக்கு இதே எச்சரிக்கையோடு குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டன. வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இதற்கு முன்னர், 1998 மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் மீது பறக்கும்படியாக ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.

ஆனால், அவை செயற்கைகோள் செலுத்தும் ராக்கெட்டுள், ஆயுதங்கள் அல்ல வட கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்