வடகொரிய ஜனாதிபதி மீது கொலை முயற்சி: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
544Shares
544Shares
lankasrimarket.com

அமெரிக்க உளவாளிகள் மேற்கொண்ட ரகசிய கொலை முயற்சி திட்டத்தில் இருந்து வடகொரிய ஜனாதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் மீது அமெரிக்க உளவாளிகள் மேற்கொண்ட உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதல் நடவடிக்கையில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில கிழமைகளாக கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் மேலும் நீடித்தால் அது தமது நாட்டுக்கு அச்சுறுத்தல் எனவும், அது அணு ஆயுத போரில் மட்டுமே சென்று முடியும் எனவும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் வருகிறார்.

மட்டுமின்றி அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கிம் ஜோங் வுன் அதிகரித்த வண்ணமும் உள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையில் ஈடுபட்டதுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளையும் கிம் ஜோங் வுன் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளார்.

இருப்பினும் தற்போதைய நெருக்கடி நிலைக்கு வடகொரியாவே காரணம் என உலக நாடுகள் அனைத்தும் குற்றஞ்சாட்டும் நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது குறித்த பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று எனக் கூறும் அந்த நாடு, உலக அளவில் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் தலையீடு தான் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த மே மாதம் வடகொரியாவில் ஊடுருவிய சில பயங்கரவாதிகள் ஜனாதிபதி மாளிகையை குறி வைத்து உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதலுக்கு முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி வடகொரிய பாதுகாப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் வடகொரியா தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதான் அமெரிக்காவின் உண்மை முகம் எனக் கூறும் வடகொரியா, உலகெங்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பணியில் மிக ரகசியமாக அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்