அமெரிக்க ஜனாதிபதியின் அரசாங்க வாகனத்தை கிம் ஜாங் உன்னுக்கு சுற்றிக்காட்டிய டிரம்ப்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
627Shares
627Shares
ibctamil.com

The Beast எனப்படும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனத்தை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பார்வையிட டிரம்ப் அனுமதித்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு முடிவடைந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் அறைக்கு வெளியே வந்துள்ளனர்.

அப்போது ஜனாதிபதி டிரம்பை அவர் தங்கியிருக்கும் ஹொட்டல் அறைக்கு அழைத்துச் செலவதற்காக The Beast எனப்படும் அரசாங்க சொகுசு வாகனம் தயாராக நின்றுள்ளது.

குறித்த வாகனத்தின் அருகாமையில் வந்ததும் கிம் ஜாங் உன் புன்முறுவல் செய்ததாக கூறப்படுகிறது.

அதே வேளையில் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரிகள் காரின் கதவை டிரம்புக்காக திறந்து விட்டுள்ளனர்.

உடனே ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் உன்-ஐ காருக்குள் செல்ல பணிந்துள்ளார். புன்னகை மாறாத முகத்துடன் கிம் ஜாங் உன்னும் 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான அந்த காருக்குள் சென்றுள்ளார்.

குறித்த சொகுசு காரானது ஏவுகணை தாக்குதல் அல்லது ரசாயன தாக்குதல் உள்ளிட்ட எதுவாக இருப்பினும் ஜனாதிபதியை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு நாடு தலைவர்களும் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது என்றே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்