நாடு திரும்பினார் கிம் ஜாங் உன்: வடகொரியா ஊடகம் தகவல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
241Shares
241Shares
lankasrimarket.com

சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பின்னர், கிம் ஜாங் உன் நாடு திரும்பியதாக வடகொரியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரின் ஷாங்ரி லா ஓட்டலில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

இதில் அணு ஆயுத ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன, 4 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்த சந்திப்புக்குபின் டிரம்ப் நாடு திரும்பிய நிலையில், கிம் ஜாங் உன் உடனடியாக அங்கிருந்து புறப்படுவதில் பல யூகங்கள் வெளியாகின.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான சந்திப்பு பற்றி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கிம்மிடம் கேட்டு தெரிந்து கொள்வார் என கூறப்பட்டது, வடகொரிய குழு புறப்பட்டு சென்ற விமானங்களை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கிம் ஜாங் உன் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு வந்தடைந்துள்ளதாக வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்