பள்ளிக்கூடத்தில் கத்தியுடன் நுழைந்து குழந்தைகள் மீது தாக்குதல்: பெண்ணின் வெறியாட்டம்... வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து குறைந்தபட்சம் 14 குழந்தைகளை கத்தியால் கீறிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் Chongqing நகரில் உள்ள Yudong New Century மழலையர் பள்ளியில் இச்சம்பவம் இன்று உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு நடந்துள்ளது.

பள்ளியில் இருந்த குழந்தைகள் காலை பயிற்சிகளை முடித்து விட்டு வகுப்பறைக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கத்தியுடன் வந்த 39 வயதான பெண் குழந்தைகளை கீறியுள்ளார்.

இதில் குறைந்தபட்சம் 14 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர்.

இந்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers