10 நாளில் 125 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தெற்கு சூடானில் வன்முறையை பயன்படுத்தி 10 நாளில் 125 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடானின் பெண்டியூ நகரில் இச்சம்பவம் நடந்ததாக Medecins Sans Frontieres என்ற அரசு சாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு சூடானில் ஐந்து ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் மற்றும் கிளர்ச்சி குழுக்கள் கையொப்பமிட்டிருந்த சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இனப் பிரச்சினைகள் மற்றும் ஆயுதங்களுடன் மோதல்கள் தொடர்ந்தன.

இந்த வன்முறையை பயன்படுத்தி தான் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த 125 பேரில் 10 வயதுக்கு குறைவான சிறுமிகள், 65 வயதுக்கு அதிகமான பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளும் அடக்கம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் உள்ளூர் அதிகாரிகள் இந்த விடயத்தை மறுத்துள்ளனர்.

இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers