காதலை ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்த நபர்: கிடைத்த தண்டனை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

எகிப்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் ஒரு இஸ்லாமிய இளம்பெண் காதலை ஏற்றுக் கொண்டதற்காக உற்சாகத்தில் தன்னை மறந்த அவளது காதலர் அவளைக் கட்டிப்பிடிக்க, இருவருக்கும் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பாலின கட்டுப்பாடுகள் கொண்ட எகிப்தில் ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்தியதோடு, கட்டியும் அணைத்துக் கொள்ள, யாரோ ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட, ஒரு பக்கம் வீடியோ வைரலாகி வருகிறது.

மறு பக்கம் அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த இளைஞருக்கு தண்டனை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு இளைஞர் கையில் பூங்கொத்துடன் ஒரு இளம்பெண் முன் மண்டியிட்டு தன் காதலைச் சொல்ல, ஒரு கணம் தயங்கும் அந்த இளம்பெண் பின் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார்.

பின்னணியில் மற்ற மாணவர்கள் விசில் ஒலி எழுப்ப, தன்னை மறந்த அந்த இளைஞர் அந்த இளம்பெண்ணை தூக்கி கட்டியணைத்துக் கொள்கிறார்.

இன்னொரு பெண் சூழ்நிலையை உணர்ந்து அவர்களை பிரித்து விட முயன்றும் அவர்கள் விலக மறுக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, அதற்கு கண்டனங்கள் அதிகரிக்க, அந்த மாணவி பயிலும் அல் அஸார் பல்கலைக்கழகம் அவரை நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

அதேபோல் அந்த இளைஞருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று கூட இருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்