ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசிய சுற்றுலாப் பயணி: நடந்த சுவாரசிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சுற்றுலாப் பயணி ஒருவர், ஆப்பிள் பழம் என நினைத்து தவறுதலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள யான்செங் வனவிலங்குகள் பூங்காvஇல் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த பூங்காவில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கரடிகளைப் பார்த்து நின்றுள்ளார்.

இரண்டு கரடிகளும் அவரை ஆர்வமாகப் பார்க்க, அப்போது அவர் கையில் இருந்த ஆப்பிள் பழத்தைத் தூக்கி வீச எத்தனித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக மற்றொரு கையில் இருந்த ஆப்பிள் ஐபோனைத் தூக்கி வீசிவிட்டார். ஐபோனை முகர்ந்து பார்த்த கரடி, அதை வாயில் கவ்விக்கொண்டு உள்ளே சென்றது.

இருப்பினும் பூங்காவைச் சேர்ந்த ஊழியர், விலை உயர்ந்த ஐபோனை, மீட்டு சுற்றுலாப் பயணியிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers