இலங்கை பெண்ணை வெளிநாட்டில் தவிக்க விட்டு உள்ளூரில் இரண்டாம் திருமணம் செய்த கணவர்... கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இலங்கையை சேர்ந்த மனைவியையும் 4 பெண் பிள்ளைகளையும் துபாயில் கைவிட்ட கணவன் சொந்த ஊரான கேரளாவுக்கு திரும்பிவிட்ட நிலையில் மனைவி உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கடந்த 1991ஆம் ஆண்டு துபாய்க்கு வேலை தேடி சென்றார்.

அங்கு கேரளாவை சேர்ந்த அப்துல் சமத் என்பவருடன் பாத்திமாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் 1994ஆம் ஆண்டு துபாயிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் பாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது தான் அப்துலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.

அதாவது ஏன் பெண் குழந்தை பெற்றெடுத்தாய் என மனைவியை கொடுமைப்படுத்த தொடங்கினார்.

ஆனால் இதன் பின்னரும் மூன்று பெண் குழந்தைகளையே பாத்திமா பெற்றெடுத்தார்.

அதாவது நான்காவதாக கடந்த 2007-ல் பாத்திமா பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் மனைவியுடன் மருத்துவமனையிலேயே சண்டை போட்ட அப்துல் மனைவி மற்றும் 4 குழந்தைகளை தவிக்க விட்டு கேரளாவுக்கு திரும்பிவிட்டார்.

அங்கு அப்துல் வேறு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததையும் பாத்திமா அறிந்தார்.

இதன்பின்னர் கணவரை பாத்திமா தொடர்பு கொள்ளவில்லை.

இதையடுத்து தனது குழந்தைகளை காப்பாற்ற வீட்டு வேலைகள் செய்வது, டியூசன் எடுப்பது போன்ற விடயங்களை பாத்திமா செய்ய தொடங்கினார்.

பின்னர் வீட்டு வாடகையை செலுத்த முடியாமல் போனதால் அங்கிருந்து பாத்திமா மற்றும் அவரின் பிள்ளைகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் தனது பணியை பாத்திமாவால் தொடர்ந்து செய்யமுடியவில்லை. இதன் காரணமாக ஒரு அறை மட்டுமே உள்ள சிறிய வீட்டில் பாத்திமா தனது 4 பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

பாத்திமா கூறுகையில், நானும் என் பிள்ளைகளும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்.

என் பிள்ளைகளும் எல்லோரையும் போல வாழ வேண்டும், எந்த ஆவணங்களும் இல்லாததால் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை.

அவர்கள் யாருக்கும் பாஸ்போர்ட் கிடையாது.

விதிமுறைப்படி அப்துல் துபாய்க்கு வந்தால் தான் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும், அல்லது கேரளாவிலிருந்து என்னால் துபாய்க்கு வர முடியாது என அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினால் பாஸ்போர்ட் கிடைக்கும்.

ஆனால் நான் ஆண் குழந்தை பெற்றால் தான் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என ஏற்கனவே என்னிடம் அவர் கூறியிருந்தார்.

நான் ஊடகங்களிடம் கோருவது என்னவெனில், என் பிள்ளைகள் துபாயிலிருந்து இந்தியா வர அப்துல் அவர்களுக்கு உதவவேண்டும், அதாவது இது குறித்த கடிதத்தை அனுப்ப வேண்டும், வேறு கோரிக்கைகள் வைத்து என் கணவர் அப்துலுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்