என் மகளை மணமுடிப்பவருக்கு 240,000 பவுண்டுகள்: ஒரு தந்தையின் அதிரடி அறிவிப்பு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

என் மகள் இன்னமும் கன்னிதான், அவளுக்கு நன்றாக ஆங்கிலமும் பேசத் தெரியும், அவளை திருமணம் செய்யும் இளைஞருக்கு 240,000 பவுண்டுகளையும் எனது எஸ்டேட் முழுவதையும் கொடுக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஒரு தந்தை.

தாய்லாந்தில் வெற்றிகரமான துரியன் பழம் உற்பத்தி செய்யும் கோடீஸ்வரரான Arnon Rodthong (58)தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளவர்.

தாய்லாந்தின் பல பகுதிகளில் பொதுவாக திருமணம் நடக்க வேண்டுமென்றால், மணமகன்தான் மணமகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

ஆனால் அந்த மரபை மீறி தனது மகளுக்காக இவ்வளவு பெரிய பரிசை கொடுக்க முன்வந்துள்ளார் Arnon.

தனது மகளை மணம் முடிப்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறும் Arnon, இரண்டே நிபந்தனைகள்தான் என்கிறார்.

ஒன்று தனக்கு வரும் மருமகன் கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும், இரண்டு தன் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் Arnon, அவர் பெரிய பட்டதாரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார்.

இந்த விளம்பரம் வெளியானதிலிருந்து ஏராளமானோர் Arnonஇன் மகளை மணம் செய்வதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் Arnonஇன் மகளோ, தன் தந்தையின் விளம்பரத்தை தன் நண்பர்கள் சொல்லிதான் தெரிந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

ஆனால் பரிசுத்தொகையை மணமகனை செலவு செய்ய விட மாட்டேன் என்று கூறும் அவர், கொரியாவில் சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக அதை பயன்படுத்தப்போவதாக தெரிவிக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்