157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்! கடைசி நேரத்தில் விமானி பேசியது என்ன? CEO சொன்ன தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமான கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், விபத்து ஏற்படுவதற்கு முன் விமானி என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பியன் ஏர்லைன்சின் Boeing 737 பயணிகள் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலே கிழே விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். இதையடுத்து இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமானநிறுவனம் எந்த ஒரு சரியான விளக்கமும் கொடுக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து நடப்பதற்கு முன்னர் அந்த விமானத்தின் விமானி Yared Getachew(29) கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு என்ன பேசினார் என்பதை விமான நிறுவனத்தின் CEO-வான Tewolde GebreMariam தெரிவித்துள்ளார்.

அதில் விமானமானது புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது. இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி Yared Getachew அதைப் பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவர், மீண்டும் விமானத்தை விமானநிலையத்திற்கு கொண்டு வரவா என்று கேட்டுள்ளார். அதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி திரும்பிய போது, இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் Yared Getachew பற்றி அவரின் மாமா Khalid Shapi கூறுகையில், இவன் கடந்த 10 வருடங்களாக விமானநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

சீனியர் கேப்டனும் கூட, அவன் 8000 மணி நேரம் விமானத்தை இயக்கியுள்ளான் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து நடப்பதற்கு முன் அதாவது, விமானம் புறப்படுவதற்கு முன் அவருடைய அம்மாவை தொடர்பு கொண்டு பேசிய Yared Getachew நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் இறுதியில் வீட்டிற்கு வரமாலே பரிதாபமாக இறந்துவிட்டார் என்று உறவின்ரகள் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்