முதலில் பட்டாசு சத்தம் என நினைத்தேன்.. துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது நடந்தது இதுதான்.. நேரில் பார்த்த பெண் பேசிய வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பெண் தான் உயிர் பிழைத்த திக் திக் நிமிடங்கள் குறித்து கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் பயங்கரமான சத்தம் கேட்ட போது பட்டாசு வெடிப்பதாக நினைத்தேன், ஆனால் பின்னர் சாலையில் பலரும் பதறியடித்து ஓடுவதை பார்த்த போது தான் ஏதோ பிரச்சனை என புரிந்தது.

நான் அந்த சமயத்தில் காரில் இருந்தேன், அப்போது என் காரின் இருபுறமும் இரண்டு பேர் வந்து விழுந்தார்கள்.

பின்னர் என் மீது துப்பாக்கி குண்டு பட்டுவிடுமோ என பயந்து குனிந்தேன், அப்போது வேகமாக என் காரை நோக்கி வந்த துப்பாக்கி குண்டு காரின் பின் பக்கமாக வந்து பட்டது.

இச்சம்பவத்தில் நான் அதிர்ஷ்டவசமாக பிழைத்தேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...