நாடு கடந்தேன்..... பல நாட்கள் நடந்த கொடுமை : ஒரு அகதி பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மியான்மரை சேர்ந்த அகதி பெண் ஒருவர் வேலை தேடும் நோக்கில் சீனாவின் எல்லையை கடந்தபோது சில நபர்களால் கடத்தப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட்து குறித்து பகிர்ந்துள்ளார்.

Seng Moon என்ற பெண்மணி தனது சகோதரியின் அறிவுறுத்தலின்பேரில் வேலை வேண்டி சீனாவின் எல்லையை கடந்து சென்றுள்ளார்.

உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் பயணத்தின்போது மாத்திரை எடுத்துக்கொண்ட காரணத்தால், சற்று அசந்து தூங்கியுள்ளார். திடீரென கண்விழித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவரது கைகள் பின்னால் இறுக கட்டப்பட்டு ஒரு சீன குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். அங்கு, சில வாரங்கள் ஒரு அறைக்கு அடைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு மாதங்கள் கழித்து அறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இவரிடம், ஒரு ஆண்மகனை காட்டி இவர்தான் உனது கணவர், இவருக்கு நீ குழந்தை பெற்றுக்கொடுத்து ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டது.

நாளடைவில் கர்ப்பமான Seng Moon ஒரு ஆண்மகனை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றெடுத்த பின்னர் நான் எனது நாட்டுக்கு செல்லட்டுமா என Seng Moon கேட்டதற்கு, தாரளமாக நீ உனது நாட்டுக்கு செல்லலாம், ஆனால் குழந்தையை உன்னிடம் ஒப்படைக்க மாட்டோம்.

குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டும்தான் உன்னை இங்கு கடத்தி வந்தோம், நீ வந்த வேலை முடிந்துவிட்டது, தாராளமாக உனது நாட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளனர்.

ஆனால், பொறுமை காத்த Seng Moon வேறு ஒரு மனித கடத்தல் கும்பலின் உதவியுடன் தனது குழந்தையை எடுத்துக்கொண்டு மியான்மருக்கு தப்பித்து வந்துள்ளார்.

சீனாவில் ஒரு குழந்தை கொள்கை மற்றும் பல ஆண்டுகளாக தொடரும் சட்டவிரோத பாலியல் தேர்வு ஆகியவற்றின் விளைவால் இவ்வாறு நடக்கிறது மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கை முறையை அரசு நீக்கியபோதிலும் சீனாவில் ஒவ்வொரு பெண்மணிக்கும் 1.15 விகித ஆண்கள் இருந்தனர், இது உலகின் மிக வளைந்த பாலின விகிதங்களில் ஒன்றாக உள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

சீனாவில் பாலின வேறுபாடு குறிப்பாக கிராமப்புறங்களில் உச்சரிக்கப்படுகிறது, பல இளைஞர்கள் நகரங்களில் பணியாற்றுவதால் தங்களுக்கு மனைவிகள் கிடைக்காமல் திண்டாட்டத்திற்கு ஆளாகிறார்கள். இதனால், கடத்தல்காரர்கள் சீன குடும்பங்களுக்கு 3,000 டொலர் முதல் 13,000 டொலர் வரை பெண்களை விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு, விற்பனை செய்யப்படும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு குழந்தை பெற்றெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில், சில பெண்கள் தங்கள் குழந்தைகளை விட்டு சென்றாலும், ஒரு சில பெண்களுக்கு தங்கள் குழந்தைகளை மீண்டும் சந்திக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

குறிப்பாக, மியான்மர் நாட்டில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக அங்கிருக்கும் பெண்கள் கடத்தப்பட்டு இப்படி சீனாவில் விற்பனை செய்யப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers