ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி ஒளிந்திருக்கும் இடம் குறித்து முக்கிய புள்ளி தகவல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சந்தேகத்துக்கிடமான 17 இடங்களில் ஒரு இடத்தில் இருக்கலாம் என கருதப்பட்ட ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, தற்போது குறிப்பிட்ட நான்கு இடங்களுக்குள் ஒன்றில் இருப்பதாக ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் தோன்றியதையடுத்து, அவர் இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட நெருங்கியாயிற்று என்று கூறியுள்ளார் ஈராக் பிரதமர் Adel Abdel Mahdi.

அந்த வீடியோவைப் பார்க்கும்போது, அல் பாக்தாதி எளிமையான மற்றும் தனிமையான ஒரு இடத்தில் இருப்பதாக தோன்றுகிறது என்றார் Mahdi.

அல் பாக்தாதி குறிப்பாக இந்த இடத்தில்தான் இருக்கிறார் என Mahdi கூறாவிட்டாலும், அவர் 17 இடங்களில் ஒன்றில் இருப்பதாக சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அதிகாரிகள் கிட்டத்தட்ட அவரை நெருங்கி விட்டதாகவும், குறிப்பிட்ட நான்கு இடங்களில் ஒன்றில் அவர் இருக்கலாம் என்றும் ஈராக்கின் பாதுகாப்பு ஆலோசகர் Hisham al-Hashemi தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பு மார்ச்சில் சிரியாவின் Baghouzஇல் தனது கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால் ஐ.எஸ் அமைப்பு முழுவதும் அழிந்து போகவில்லை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் Mahdi.

ஐ. எஸ் அமைப்பு மீண்டும் தன்னை கட்டியெழுப்ப முயற்சி செய்யும், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் நடத்தியது போல, மீண்டும் தாக்குதல்கள் நடத்த முயற்சி செய்யும் என்று எச்சரித்துள்ளார் அவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்