வெளிநாட்டு வேலைக்கு சென்ற மகனின் பரிதாப நிலை... கண்ணீர் விட்ட தாய்க்கு வந்த மகிழ்ச்சியான செய்தி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் கொத்தடிமையாக இருப்பதாக தாய் புகார் கொடுத்ததையடுத்து, அவரை மீட்க வெளியேற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உதவியுள்ளார்.

திருப்பூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருப்பூர் கலெக்டர் பழனிசாமியிடம் அளித்த மனுவில், என் மகன்களான மணித்துரை (23), மணிகண்டன் (21) ஆகியோரை குடும்ப வறுமையால் வேலைக்காக வெளிநாடு அனுப்ப முயன்றேன்.

அவிநாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 2.70 லட்சம் ரூபாய் பெற்று இருவரையும் தாய்லாந்து நாட்டிலுள்ள பனியன் கம்பெனிக்கு ஜனவரி மாதம் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளனர். சம்பளமும் வழங்கப்படவில்லை. கொத்தடிமையாக பணிபுரிந்துள்ளனர்.

நான் ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு 88 ஆயிரம் ரூபாய் கொடுத்து மணிகண்டனை திருப்பூருக்கு வரவழைத்தேன். மூத்த மகன் மணித்துரையை மீட்க முடியவில்லை. திருப்பூர் பொலிசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மகனை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் தாய்லாந்தில் இருந்து வெளியேற இந்திய தூதரகம் உதவி செய்துவருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் பழனிசாமி கூறுகையில், மாரியம்மாள் மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் பரிந்துரைப்படி, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers