புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து: உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிய விமானிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சைபீரிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திரம் செயலிழந்ததால் ரஷ்ய விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

சைபீரிய குடியரசான புரியாஷியாவின் நிஜ்னியாங்கார்ஸ்கில் இருந்து புறப்பட்ட அன்டோனோவ் -24 ஜெட் என்கிற ரஷ்ய பயணிகள் விமானத்தில், அடுத்த சில நிமிடங்களில் திடீரென இயந்திரம் செயலிழந்துள்ளது.

இரண்டு குழந்தைகள் உட்பட 43 பேர் பணித்த விமானமானது உடனடியாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால், அங்கிருந்த வீடுகளில் மோதி விமானம் நின்றது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்த அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 22 பேர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேசமயம் விமானத்தின் முன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் விமானிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ரஷ்ய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்