ஒரே மாதிரி அழகாக இருந்த இரு பெண்கள்.. அவர்கள் டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அமெரிக்காவில் தனித்தனியாக சிறுவயதிலிருந்து வசித்த நிலையில் அவர்கள் சகோதரிகள் என டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

தென் கொரியாவை சேர்ந்தவர் ஆஸ்லே என்ரைட் (31). இவரை அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் மற்றும் பவுல்டி தம்பதி கடந்த 1988-ல் தத்தெடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர்.

அதே போல தென் கொரியாவை சேர்ந்த இன்னொரு பெண் த்ரிஷா தாம்சன் (30). இவரை கடந்த 1989ஆம் ஆண்டு ராண்டி மற்றும் பவுலா தம்பதி தத்தெடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் என்ரைட்டும், த்ரிஷாவும் சகோதரிகள் என தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து த்ரிஷா கூறுகையில், நானும் என்ரைட்டும் ஒரே ஷாப்பிங் மாலுக்கு பலமுறை சென்றுள்ளோம், ஆனால் ஒருவரையொருவர் பார்த்து கொண்டதில்லை.

இந்நிலையில் கடந்த 2017-ல் கிறிஸ்துமஸ் பரிசாக டிஎன்ஏ பரிசோதனை பெட்டகம் என்ரைட்டுக்கு வந்தது.

அந்த பரிசோதனையை செய்த அவர் மெயில் பெட்டியில் பரிசோதனை முடிவை வைத்தார்.

அதே போல நானும் டிஎன்ஏ பரிசோதனை செய்தேன், அதன் முடிவுகள் வந்த நிலையில் நானும் என்ரைட்டும் சகோதரிகளாக இருக்கலாம் என பரிசோதனை செய்த நிறுவனம் தெரிவித்தது.

பின்னர் நாங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்களானோம், நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பது தெளிவாக எங்களுக்கு தெரிந்தது.

இதையடுத்து நாங்கள் தத்து கொடுக்கப்பட்ட ஆவணங்களை பார்த்த போது எங்கள் இருவருக்கும் ஒரே தாய் என்பது தெரியவந்தது.

இதன்பின்னர் நாங்கள் சகோதரிகள் என்பது உறுதியானது.

இத்தனை ஆண்டுகள் கழித்து நாங்கள் ஒன்று சேர்வோம் என நினைக்கவில்லை, நாங்கள் இணைந்த தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...