நாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட நடைபெற்று வரும் நிலையில், அதை திசை திருப்ப இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோத இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் போராட்டம் வெடித்து வருகிறது.

குறிப்பாக இளைஞர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த போராட்டம் விவகாரம் தொடர்பாக மக்களை திசை திருப்ப, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு போர் பதற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாஸிஸ சித்தாந்தத்தைக் கொண்டு, ஹிந்து தேசமாக இந்தியாவை மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிராகவும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஒருவேளை ரகசியத் தாக்குதலை இந்தியா நடத்தினால், உரிய பதிலடி கொடுப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அதை எதிா்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்