பனிச்சரிவில் மூழ்கிய 12 வயது சிறுமி... நம்பிக்கையை இழந்த தாய்: 18 மணி நேரத்திற்கு பின் நடந்த அதிசயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பனிச்சரிவில் மூழ்கிய 12 வயது சிறுமி 18 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசயம் சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போதுவரை 76 பேர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் பேரழிவு மேலாண்மை அமைச்சர் அஹ்மத் ராசா காத்ரி கூறியுள்ளார்.

மேலும், 21 உடல்கள் மீட்கப்பட்ட காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்குதான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வானிலை உள்ளிட்ட சம்பவங்களால் நாடு முழுவதும் 100க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக பாக்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

Reuters

இந்த நிலையில் பனிச்சரிவால் ஒரு அறையில் சிக்கிக்கொண்ட 12 வயது சிறுமி சமீனா என்பவர் 18 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், நான் அங்கேயே இறந்துவிடுவேன் என நினைத்தேன். என் கால் முறிந்து வாயிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. மீட்கப்படும்வரை நான் தூங்காமல் காத்திருந்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய ஒரு மகனையும் இன்னொரு மகளையும் இழந்த சமினாவின் தாயார் ஷாஹனாஸ் பீபி, பனியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நானும் எனது சகோதரர் இர்ஷாத் அஹ்மத்தும் சமீனாவை உயிருடன் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்.

பனி சரிந்து வரும் சத்தம் எங்களுக்கு கேட்கவில்லை. சில நிமிடங்களுக்குள் மூன்று மாடி வீடு அப்படியே மூழ்கடிக்கப்பட்டது. ஒரு கண்சிமிட்டலுக்குள் அந்த சம்பவம் நடந்து முடிந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்