நடுவானில் மாயமான விமானம்! பயணித்தவர்களின் கதி என்ன? சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைக்கு மேலே பறந்துக் கொண்டிருந்த விமானம் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன்ஷைன் கடற்கரையில் உள்ள கலவுண்ட்ராவிலிருந்து குயின்ஸ்லாந்து கடற்கரையின் மோர்டன் தீவுக்குச் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானவே மாயமாகியுள்ளது.

உள்ளுர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு அதிகாரிகள் விமானம் மாயமானது தொடர்பான தகவலை பெற்றதாக தெரிவித்துள்ளனர். விமானத்தில் இரண்டு பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

விமானம் ராடாரில் இருந்து மறைவதற்கு முன்பு விமானி அழைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானதை அடுத்து தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் பணியை அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் ஒருங்கிணைத்து வருகிறது.

புதன்கிழமை மாலை மோர்டன் தீவின் வடக்கே மீட்புக் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குயின்ஸ்லாந்து கடலோர காவல்துறை, தன்னார்வ கடல் மீட்பு மற்றும் இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்கள் இப்பகுதியில் தேடி வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers