உலுக்கும் கொரோனா நோய்... சாலையில் விழுந்து அசைவில்லாமல் இறந்து கிடக்கும் மக்கள்: பதபதைக்க வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
#S

சீனா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள், சாலையில் விழுந்து இறக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாக பதபதைக்க வைத்துள்ளது.

குறித்த காட்சிகள் சீனாவின் வுஹான் நகரத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் வுஹான் நகரத்தில் தான் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் வேகமாக பரவி வருவதால் வுஹான், ஹுவாங்காங், ஜிங்ஜோ, சியன்னிங், சிபி ஆகிய நகரங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த 5 நகரங்களிலும் சுமார் 35 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வுஹான் நகரில் எடுக்கப்பட்ட வீடியோவில், சாலையில் உட்பட பொது இடங்களில் நின்றுக்கொண்டிருக்கும் நபர்கள், திடீரென சரிந்து விழுந்து அசைவில்லாமல் கிடக்கின்றனர்.

உரிய பாதுகாப்பு உடையுடன் சம்பவயிடத்திற்கு வரும் மருத்துவ குழுவினர், குறித்த நபர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர்.

வுஹான் நகரில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் வௌவால் இறைச்சியின் மூலம் இந்நோய் பரவியதாக கூறப்படுகிறது.

தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்