விமானத்தில் முக மூடி அணிந்து வந்த நபரை வெளியேற்றிய நிறுவனம்... பீதியில் உறைந்த பயணிகள்: வெளியான காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் முகம் தெரியாத அளவிற்கு மாஸ்க் அணிந்து கொண்டு பயணி ஒருவர் வந்ததால், கொரோனோ வைரஸ் குறித்து சக பயணிகள் பீதியடைந்ததால், விமானம் புறப்படுவதற்கு தமாதமாகியுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த 20-ஆம் திகதி அமெரிக்காவின் Dallas-ல் இருந்து Houston-க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

இதற்காக விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்ட போது, ஒரு பயணி முகம் முழுவதிலும் முக மூடி அணிந்திருந்தார். அவர் யார் என்பது கூட தெரியவில்லை, இதனால் விமான ஊழியர்கள் முக மூடியை கழற்றும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் உடல்நலம் காரணமாக அணிந்துள்ளதாக கூறி, கழற்ற மறுத்துள்ளார்.

இதைக் கண்ட பயணிகள் சிலர் பீதியடைந்துள்ளனர், அதில் ஒரு சிலர் கொரோனோ வைரஸ் பீதியை கிளப்பிவிட, பயணிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இது குறித்து அந்த விமானத்தில் பயண செய்த நபர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், முக மூடி அணிந்து வந்த நபரால் குறித்த விமானம் புறப்பட தாமதமாகியுள்ளது, அவரை வெளியேற்ற முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து குறித்த நபர் வெளியேற்றப்பட்டு, அதன் பின் வேறொரு விமானத்தில் முக மூடி இல்லாமல் அனுப்பப்பட்டதாகவும், Houston செல்லவிருந்த விமானம் இந்த நபரால் ஒரு மணி நேரம் தாமதமானதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்