சீனா- வுஹான் நகரை மொத்தமாக சூழ்ந்திருக்கும் கரும்புகை: அச்சத்தில் பொதுமக்கள் சொன்ன தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொடிய கொரோனா வியாதிக்கு இலக்காகியிருக்கும் சீனாவின் வுஹானை மூழ்கடித்துள்ள கரும்புகை குறித்து பல சீன மக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

திடீரென்று வுஹான் நகரம் மொத்தமும் கரும்புகை சூழ்ந்ததால், கொரோனா வியாதியால் மரணமடைந்த மக்களை ரகசியமாக எரியூட்டுவதாக மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இதுவரை சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இறப்பு எண்ணிக்கை என்பது தங்களுக்கு சந்தேகத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கரும்புகை திடீரென்று சூழ்ந்துகொள்ள காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டத்தில், வுஹான் நகரில் அமைந்துள்ள அனைத்து எரியூட்டும் இல்லங்களும் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டதால், வுஹான் நகரை இந்த கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நோய் பரவாமல் தடுப்பதற்காக, அடக்கம் மற்றும் இறுதிச் சடங்குகள் தடைசெய்யப்பட்டு, அனைத்து கொரோனா வைரஸ் இறப்புகளையும் தகனம் செய்யுமாறு சீனாவில் தேசிய சுகாதார ஆணையம் உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீன நாட்டினர் சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளை பதிவிட்டுள்ளனர், நாள் முழுவதும் எரியூட்டிகள் இயங்கினால், இறப்பு எண்ணிக்கை "நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு" அதிகமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக ஒன்றில் இருந்து 3 சடலங்கள் வரையில் வுஹான் நகரின் முக்கிய எரியூட்டும் இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம் என்ற நிலையில்,

தற்போது 100 முதல் 300 சடலங்கள் வரை எரியூட்டப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபோன்ற எரியூட்டும் இல்லங்கள் பொதுவாக அரை நாள் மட்டுமே செயல்பட்டு வந்துள்ளது எனவும்,

ஆனால் சமீப நாட்களாக இரவும் பகலும் செயல்படுவதாக சில மக்கள் தகவல் பகிர்ந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் கொரோனா வியாதிக்கு இதுவரை 426 பேர் இறந்துள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்