மலேசிய விமானம் எங்கே விழுந்து கிடக்கிறது என்பது எனக்கு தெரியும்: அடித்துக் கூறும் முன்னாள் விமானி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம் MH370, எங்கே இருக்கிறது என்று எனக்கு மிகச் சரியாக தெரியும் என முன்னாள் விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளாக விமானியாக பணி புரிந்த Byron Bailey, ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம் MH370 எங்கே இருக்கிறது என்று எனக்கு மிகச் சரியாக தெரியும் என்று தெரிவித்துள்ளதோடு, விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து தவறான இடத்திலேயே தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு பதிலாக, அதிலிருந்து 20 மைல்கள் தெற்கே தேடவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சொல்வது தவறாக இருக்குமென்றால், ஏலியன்கள்தான் அந்த விமானத்தை தூக்கிச் சென்றிருக்க வேண்டும் அல்லது அது கசகஸ்தானில் எங்காவது மறைத்துவைக்கப்பட்டிருக்கவேண்டும் என வேடிக்கையாக கூறுகிறார் அவர்.

Credit: Sky News

எனக்கு மிக உறுதியாகத் தெரியும், வேண்டுமென்றால் எனது வீட்டை வைத்து பந்தயம் கட்டுகிறேன் என்கிறார் Bailey.

சமீபத்தில், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமரான டோனி அபோட்டும், அந்த விமானத்தின் விமானி வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

thesun

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்