புதருக்குள் தலையில்லாத பெண் சடலம் கிடைக்கும் என ஆருடம் கூறிய பாதிரியார்! அங்கு பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
293Shares

நைஜீரியாவில் புதருக்குள் தலையில்லாமல் பெண்ணின் சடலம் இருக்கும் என தீர்க்கதரிசி போல பாதிரியார் ஒருவர் கூறிய நிலையில் அதன்படியே சடலம் அங்கு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Augustina Inebere என்ற 68 வயது பெண்மணி 17 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனார்.

குடும்பத்தார் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அங்குள்ள தேவாலயத்தை சேர்ந்த பாதிரியாரான Goddy Onyeho என்பவர், Augustina புதர்கள் நிறைந்த பகுதியில் தலையில்லாமல் சடலமாக உங்களுக்கு கிடைப்பார் என பெண்ணின் குடும்பத்தார் சிலரிடம் ஆருடம் போல கூறினார்.

ஆனால் இதை அவர்கள் முதலில் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் பொலிசார் தொடர்ந்து Augustina-ஐ தேடி வந்தனர். இந்த சூழலில் நேற்று Goddy சொன்னபடியே Augustina புதருக்குள் தலையில்லாமல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதையடுத்து பொலிசாரிடம் Augustina குடும்பத்தார் பாதிரியார் குறித்து சொன்னார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் உடனடியாக இந்த கொலையில் தொடர்புடையதாக கூறி பாதிரியார் Goddy உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதன் முடிவில் தான் இந்த கொடூர கொலை தொடர்பிலான மேல் விபரங்களை பேச முடியும் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்