கொரோனா அச்சம்: வெளியேவும் செல்லக்கூடாது... நாயையும் வாக்கிங் அழைத்து செல்லவேண்டும்: கைகொடுத்த தொழில்நுட்பம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கொரோனாவிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சைப்ரஸ் தீவுவாசி ஒருவர் நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதற்கு என்ன செய்வது என்று யோசித்துள்ளார்.

கடைசியாக, ஊரடங்குச் சட்டத்தையும் மீறாமல், நாயையும் வாக்கிங் அழைத்துச் செல்ல தொழில்நுட்பம் அவருக்கு கைகொடுத்து உதவியுள்ளது.

சைப்ரஸ் தீவைச் சேர்ந்த Vakis Demetriou என்பவருக்குதான் இந்த திட்டம் தோன்றியுள்ளது.

நாங்கள் ஐந்து நாட்களாக அடைபட்டுக்கிடக்கிறோம், வீட்டில் இருப்பது பாதுகாப்புதான், அதே நேரத்தில் நாயையும் குஷியாக வைத்துக்கொள்ளவேண்டுமே என்கிறார் Demetriou.

ஆகவே, தனது வீட்டு பால்கனியில் நின்றுகொண்ட Demetriou, தனது நாய் ஆலிவரின் கழுத்துபட்டையுடன் தனது ட்ரோனையும் இணைத்து அதை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தியுள்ளார்.

நாய் ஜாலியாக வாக்கிங் செல்ல, Demetriou பாதுகாப்பாக தனது வீட்டு பால்கனியில் நின்றுகொண்டார்.

இதை அவரது நண்பர் ஒருவர் வீடியோவாக பதிவுசெய்துள்ளார். இதற்கிடையில், Demetriouவின் ட்ரோன் குறைந்த எடை கொண்டதாக இருந்ததால்தான் இந்த வாக்கிங் சுமூகமாக நடந்து முடிந்தது.

இதுவே அதிக எடைகொண்ட ட்ரோனாக இருக்குமானால், சமயத்தில் ட்ரோன் நாயைத் தூக்கிக்கொண்டு பறந்துவிடும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...